Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“ஊருக்கு போகவே பயமா இருக்கு” பிரச்சாரத்திற்காக வந்தவர் கொடூர கொலை… திட்டமிட்டு பழிவாங்கிய சகோதர்கள்…!!

தனது தந்தையை கொன்றவரை சகோதரர்கள் இணைந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள அத்திகொண்டஹள்ளி பகுதியில் சென்னகிருஷ்ணன் என்னும் விவசாயி வசித்து வந்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உள்ளிபண்டா கிராமத்தை சொந்த ஊராகக் கொண்டுள்ள இவருக்கும், இவரது தாய்மாமா  ஓபேகவுடுவிற்கும் ஏற்கனவே  நிலத்தகராறு இருந்துள்ளது. கடந்த ஆண்டு இந்த நிலத்தகராறு விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்ட போது ஒபத்தில் சென்னகிருஷ்ணன் ஓபேகவுடுவை கொலை செய்துள்ளார். இதனால் சென்னகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவத்திற்கு பிறகு ஊருக்கு வருவதை தவிர்த்து வந்த சென்னகிருஷ்ணன் தேர்தல் பிரச்சாரத்திற்காக தனது சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார். இதனை அறிந்த ஓபேகவுடுவின் 3 மகன்களும் சென்னகிருஷ்ணனை கொலை செய்ய திட்டமிட்டு வந்துள்ளனர்.

அவர்களின் திட்டப்படி சாலையில் நடந்து சென்ற சென்னகிருஷ்ணன் மீது டிராக்டரால் மோதியுள்ளனர். இதில் கீழே விழுந்த சென்னகிருஷ்ணனனின்  தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த தளி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சென்னகிருஷ்ணனின் உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஒபேகடுவின் மகன்கள் மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்த விசாரணையில் நிலத்தகராறில் தங்களது தந்தையான ஒபேகடுவை கொலை செய்த காரணத்திற்காக பழி வாங்கவே சென்னகிருஷ்ணனை கொன்றதாக காவல்துறையினரிடம் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும் அவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |