சரக்கு ஆட்டோ-இருசக்கர வாகனம் மோதிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள நொய்யல் பகுதியில் கார்த்தி என்ற கட்டிட தொழிலாளி வசித்து வருகிறார். இவர் மேஸ்திரி ராதாகிருஷ்ணனுடன் தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது இவர்களின் இரு சக்கர வாகனத்தின் மீது அவ்வழியாக வந்த கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ மோதி விட்டது.
இதில் படுகாயமடைந்த ராதாகிருஷ்ணன் மற்றும் கார்த்தியை பொதுமக்கள் மீட்டு, அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் சரக்கு ஆட்டோ ஓட்டுனர் வடிவேல் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.