தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு ரேண்டம் முறையில் கணினி மூலம் பணியிடம் தேர்வு செய்யப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 1,679 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்ற உள்ள பணியாளர்கள், தலைமை அலுவலர்கள் என அனைவருக்கும் மூன்று கட்டங்களாக தேர்தல் தொடர்பான பணிகள் குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.
தற்போது வாக்குப்பதிவு மையத்தில் பணிபுரிய உள்ள பணியாளர்கள், அலுவலர்கள் 1,060 பேருக்கும், 843 காவல்துறை அலுவலர்கள், 197 நுண்பார்வையாளர்களும் மற்றும் பணியாளர்களுக்கும் கணினி மூலம் மேற்கொள்ளக்கூடிய பணியிடம் குறித்த தேர்வு ரேண்டம் முறையில் தேர்வு செய்யப்பட்டது. அவர்களுக்குரிய இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர், தேர்தல் பணி அலுவலர்கள் பணி மேற்கொள்ள அந்தந்த இடத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி கூறினார்.