Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எல்லாம் பாதுகாப்பா இருக்கணும்… முன்னேற்பாடு பணி தீவிரம்… மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி காரைக்குடியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர் என 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காரைக்குடி அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அழகப்பா பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மதுசூதன் ரெட்டி நேரில் சென்று பார்வையிட்டார்.

சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் மாவட்ட ஆட்சியர் உடனிருந்தார். சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி கட்டிடத்தையும், திருப்பத்தூர் மற்றும் காரைக்குடி சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள அழகப்பா பொறியியல் கல்லூரி மெயின் வளாகத்தையும், அதனை தொடர்ந்து மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையமான முருகப்பா கூட்டரங்கையும் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டார்.

Categories

Tech |