Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இது மட்டும் தான் முடியனும்… எல்லாம் தயாரா வச்சிருக்காங்க… பாதுகாப்பு பணி தீவிரம்..!!

பெரம்பலூரில் வாக்கு எண்ணும் மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெரம்பலூர் தொகுதியில் 428 வாக்குச்சாவடிகளில் பதிவாகும் வாக்குகளும், வேப்பூர் அனைத்து மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் என்னும் பகுதியில் 328 வாக்குச்சாவடிகளில் பதிவாகும் வாக்குகளும் எண்ணப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வேப்பூர் மகளிர் கல்லூரியிலும், பெரம்பலூர் அரசு கல்லூரியிலும் வாக்கு எண்ணப்பட உள்ள அறை தயார் நிலையில் உள்ளது. மேலும் தடுப்பு வேலிகள் வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு சரி பார்க்கும் இயந்திரம், மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு கருவிகள் ஆகியவை பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையத்தில் வைப்பதற்காக அறை அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குகள் எண்ணப்படும் அறை உள்ளிட்டவற்றை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகளும் வாக்கு எண்ணும் மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கோபுரம், மூன்று அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்காக அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் தற்போது வாக்கு எண்ணும் மையங்கள் கொண்டு வரப்படுள்ளது.

Categories

Tech |