இன்றைய பஞ்சாங்கம்
05-04-2021, பங்குனி 23, திங்கட்கிழமை, நவமி திதி பின்இரவு 02.19 வரை பின்பு தசமி.
உத்திராடம் நட்சத்திரம் பின்இரவு 02.05 வரை பின்பு திருவோணம்.
மரணயோகம் பின்இரவு 02.05 வரை பின்பு அமிர்தயோகம்.
நேத்திரம் – 1.
ஜீவன் – 1/2.
புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
இராகு காலம்- காலை 07.30 -09.00,
எம கண்டம்- 10.30 – 12.00,
குளிகன்- மதியம் 01.30-03.00,
சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
இன்றைய ராசிப்பலன் – 05.04.2021
மேஷம்
உங்களின் ராசிக்கு உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளுக்கு கல்வி விஷயமாக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். சுப முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடு தோன்றும். எடுக்கும் புதிய முயற்சிகளில் தடைக்கு பின்பு நற்பலன் கிட்டும். வியாபாரத்தில் தேக்கங்கள் விலகி எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனஉளைச்சல் அதிகமாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். பணியில் கவனம் தேவை.
கடகம்
உங்களின் ராசிக்கு உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். பணிபுரிபவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும். வங்கி சேமிப்பு உயரும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு உங்களுக்கு திடீர் தனவரவுகள் உண்டாகும். உறவினர்கள் வழியில் அனுகூலம் பெறுவீர்கள். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சாதகப் பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடன் பிறந்தவர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். சுப செலவுகள் செய்ய நேரிடும்.
கன்னி
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை உருவாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைபடும். பணவரவு சுமாராக இருந்தாலும் உங்கள் தேவைகள் நிறைவேறும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். நண்பர்களின் உதவி மகிழ்ச்சியை அளிக்கும்.
துலாம்
உங்களின் ராசிக்கு நீங்கள் செய்யும் வேலையில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படும். வாகனங்களால் எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்கள் வழியில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிட்டும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு உறவினர்கள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கிடைக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
தனுசு
உங்களின் ராசிக்கு உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படலாம். வேலையில் உயர் அதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
மகரம்
உங்களின் ராசிக்கு உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும், பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு நீங்கள் எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. வேலையில் உடனிருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.
மீனம்
உங்களின் ராசிக்கு நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். சிலருக்கு கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். வருமானம் பெருகும்.