தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வந்தனர். இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கி வாக்கு சேகரித்தனர்.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் அறிவித்தவாறு இரவு 7 மணிக்கு மிகச்சரியாக தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவு பெற்றது. இனி தேர்தல் தொடர்பாக பரப்புரையை சமூக வலைத்தளங்கள், தொலைக்காட்சிகள் உள்ளிட்டட எதன் மூலமாகவும் செய்யக்கூடாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து வாக்காளர்கள் அல்லாதோர் தொகுதியில் இருந்து வெளியேறவும் உத்தரவிட்டுள்ளார்.