நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் அருகே சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகை மாவட்டத்தில் சாராய கடத்தலை தடுக்கும் வகையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று நாகூர் காவல்துறையினர் நாகூர் கிழக்கு கடற்கரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது நாகை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த வாலிபரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அந்த சோதனையில் அவர் சட்டவிரோதமாக சாராயம் கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த அவர் விசாரணையில் நல்லூர் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் குப்புசாமி என்பவரது மகன் மருத கண்ணன் என்பது தெரியவந்தது. இதையடுத்து நாகூர் காவல்துறையினர் மருது கண்ணன் மீது வழக்குப்பதிந்து பின் கைது செய்து செய்து சிறையில் அடைந்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும், 35 லிட்டர் சாராயத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.