கொரோனாவால் மற்றுமொரு திரைத்துறை பிரபலம் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதில் பல்வேறு திரை பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர்கள் அமீர்கான், மாதவன், நடிகை கௌரி கிஷன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு இன்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலை மற்றும் ஒரு பிரபலத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அது யார் என்றால், விக்ரம் வேதா, இறுதிச்சுற்று, மண்டேலா உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த சசிகாந்த்க்கு தான் தற்போது கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இப்படி கொரோனாவால் அடுத்தடுத்து திரை பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருவது திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.