விளையாடிக்கொண்டிருந்த 11 வயது சிறுவன் பொம்மையால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
மத்திய பிரதேசத்தில் உள்ள கோலார் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன் தனது மாமாவின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளான். சம்பவத்தன்று சிறுவனின் மாமா மற்றும் அத்தை வேலைக்குச் சென்றுவிட அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் 12 வயது சிறுமி சிறுவனுடன் விளையாடுவதற்காக சென்றுள்ளார். அங்கு சுயநினைவில்லாமல் சிறுவன் படுத்திருப்பதை பார்த்து தனது பெற்றோரிடம் கூற அவர்கள் சிறுவனின் மாமாவிற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனை அடுத்து விரைந்து வந்த அவர் சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு மருத்துவர்கள் சிறுவன் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். சிறுவன் விளையாடும் பொம்மையின் வால் அவனது கழுத்தில் சுற்றி இருந்ததாக சிறுமியும் அவனது மாமாவும் கூறியுள்ளனர். விளையாட்டின்போது சிறுவன் தெரியாமல் பொம்மையின் வாலை எடுக்க முயற்சித்து கழுத்து இறுகி உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகின்றது. ஆனாலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் பிரேத பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர்.