காஷ்மீரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைத்து பள்ளிகளும் இன்று முதல் மூடப்படும் என அம்மாநில ஆளுநர் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்ட தால் மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், பெரும்பாலான பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி கொரோனா காலத்தில் பல சிக்கல்கள் ஏற்பட்டன. மேலும் நாட்டின் பொருளாதாரமும் மிகவும் பாதிக்கப்பட்டது. தற்போது படிப்படியாக ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளதால் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் காஷ்மீரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைத்து பள்ளிகளும் இன்று முதல் மூடப்படும் என்று அம்மாநில ஆளுநர் மனோஜ் சின்கா அறிவித்துள்ளார். 10,11,12 ஆம் வகுப்புகள் ஒரு வாரத்துக்கு விடுமுறை என அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.