நாடு முழுவதும் 2000க்கும் அதிகமான கொரோனா ஆய்வு மையங்கள் அதிகரித்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது.
அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. அதனால் மத்திய அரசு நாடு முழுவதும் பலத்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் உருமாறிய கொரோனா இந்தியாவில் 18க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பரவத் தொடங்கியுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.
அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் 2000க்கும் அதிகமான கொரோனா ஆய்வு மையங்கள் அதிகரித்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார். இந்தியாவில் இதுவரை 7கோடியே 50 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், 6 கோடியே 50 லட்சம் டோஸ் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.