Categories
உலக செய்திகள்

இளம்பெண் வீட்டில் சடலமாக மீட்பு…. தனிமைப்படுத்தப்பட்ட நாய்கள்…. காரணம் என்ன….?

கனடாவில் இளம்பெண் ஒருவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடா ஒன்ராறியோவின் மிடில்செஸ் கவுண்டியில் இளம்பெண் காயங்களுடன் வீட்டில் மயக்கமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து காவல்துறையினர் மருத்துவ உதவி குழுவை அழைத்துக்கொண்டு விரைந்து சென்றனர். அங்கு  மருத்துவர்கள் அந்த பெண்ணை பரிசோதித்துப் பார்த்தபோது அவர் இறந்துவிட்டார் என்று தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அந்த பெண் 3 நாய்கள் சேர்ந்து தாக்கியதால் உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர். மேலும் அந்த மூன்று நாய்களும் தனியாக ஒரு இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளது என
தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |