தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வந்தனர்.
இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கி வாக்கு சேகரித்தனர். இந்நிலையில் நேற்று இரவு 7 மணியோடு தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.