Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணி நியமன முறைகேடு.. ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை..!!

மதுரை  காமராஜர்  பல்கலைக்கழகத்தில் பணி  நியமனத்தின்   போது  நடந்த  முறைகேடு  குறித்து முதற்கட்ட  விசாரணை  தொடங்கியுள்ளது .

காமராஜர்  பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக செல்லத்துரை  பணியாற்றிய போது பேராசிரியர்கள்  நிர்வாக  பிரிவு அலுவலர்கள்  உட்பட  69 பேர் புதிதாக   நியமனம்     செய்யப்பட்டனர்.   இந்த  நியமனத்தின்   போது  விதி மீறல்கள் நடந்ததாகவும்  மற்றும்  தகுதியற்றவர்கள்  பணி   நியமனம்  பெற்றதாகவும் உயர்   நீதி  மன்ற  மதுரை  கிளையில்   வழக்கு தொடரப்பட்டது .

வழக்கை  விசாரித்த  நீதிமன்றம்  ஒய்வு  பெற்ற  நீதிபதி ஒருவர்  தலைமையில் விசாரணை மேற்கொள்ள  உத்தரவிட்டது . இதையடுத்து  ஓய்வு  பெற்ற  உயர் நீதிமன்ற  நீதிபதி அக்பர்  அலி  தலைமையில்  விசாரணை  குழு  அமைக்கப்பட்டது.  அக்பர்  அலி  தலைமையில் ஆன   விசாரணை குழு முதற்கட்ட  விசாரணையை  தொடங்கியுள்ளது. பல்கலைக்கழகத்திற்கு  வருகைதந்த  குழுவினர்  பணி நியமனம்  தொடர்பான ஆவணங்களை  பெற்று  ஆய்வுகளை  மேற்கொண்டனர் .

 

Categories

Tech |