சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தேர்தல் விதிமுறையை மீறி பட்டாசு வெடித்தவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வந்தது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டனி-நெஞ்சத்தூர் கிராமங்களில் வாக்கு சேகரிக்கும் கூட்டங்கள் திமுக சார்பில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக கண்டனி கிராமத்தில் வசித்து வரும் ராமசாமி என்பவரது மகன் ராஜேந்திரன் பட்டாசு வெடித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.