ராணிப்பேட்டையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தொடங்கிய திருவிழா தற்போது நிறைவு பெற்றது.
தமிழகத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறப்புவாய்ந்த கலவை காரிசநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்றது. இத்திருவிழாவை முன்னிட்டு மூலவரான காரிச நாதருக்கு தினமும் அபிஷேக ஆராதனைகள் செய்த தோடு மட்டுமல்லாமல் சிறப்பு அலங்காரங்களும் நடைபெற்றது.
இந்நிலையில் நிறைவடையும் 10 ஆம் நாளன்று நறுமண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்த காரிச நாதரை பொதுமக்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.