திறமைவாய்ந்த இயக்குனர்களின் படத்தில் மட்டுமே நடிக்க பிரபாஸ் முடிவு செய்துள்ளார்.
பாகுபலி படத்தின் மூலம் தேசிய அளவில் பிரபலமான நடிகர் பிரபாஸ். அதன்பிறகு இவர் திறமைவாய்ந்த இயக்குனர்களின் படங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளார். அதன்படி கன்னடத்தில் வெளியாகி மாபெரும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன “கே.ஜி.எஃப்” திரைப்படத்தின் இயக்குனரான பிரசாந்த் நீலீன் “சலார்” எனும் படத்தில் தற்போது பிரபாஸ் நடித்து வருகிறார்.
இதை தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரபாஸ் அடுத்ததாக நடிக்க உள்ளார் என்று தெரியவந்துள்ளது. தற்போது இது குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.