மதுரையில் பழங்கால கோவில் இருந்த இடம் தெரியாமல் அதன் மேல் கட்டம் கட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
மதுரையில் பழங்காநத்தம் ரவுண்டானம் அருகே குடியிருப்பு பகுதிகள் மற்றும் ஏராளமான கடைகள் உள்ளன. இங்கு ஒரு கடையை அதன் உரிமையாளர் இடித்து விட்டு புதிதாக கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டார் . இதற்கிடையில் அதன் அருகே கோயில் மண்டபம் போன்ற சுவடுகள் காணப்பட்டதால் , இதுபற்றி தகவலறிந்த அப்பகுதி மக்களும், சிவனடியார்களும் அங்கு சென்று பார்த்தபோது பராமரிப்பில்லாத சிவன் கோயிலை சுற்றிலும் சுவரால் மறைத்தும், வாசல் கூட தெரியாத வகையில் அடைத்தும் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கட்டி இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், கோவிலின் நுழைவாயில் அருகே சுவருடன் ஓட்டிய விநாயகர் சிலையும், கோவில் மதில் சுவர்களும் சிதலமடைந்து கிடந்ததை பார்த்து வேதனை அடைந்தனர். இதையடுத்து , கோவிலின் உள்ளே இருள் சூழ்ந்திருந்த நிலை காணப்பட்டதால் , கருவறையில் சிலைகள் உள்ளதா என்பதைக் கூட காண முடியவில்லை .
இக்கோவில் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய கோவிலாக இருக்கும் என கூறப்படுவதால் இது பற்றி வருவாய் துறையினருக்கும் , அறநிலையத் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது . அவர்கள் வந்து ஆய்வு செய்த பின்னரே சிலைகள் உள்ளதா ? அல்லது திருடு போயுள்ளதா ? எனத் தெரியவரும். மேலும் , சிதலமடைந்த கோவிலை ஆக்கிரமித்தவரிடமிருந்து மீட்டு பூஜைகள் நடத்த வேண்டும் என சிவனடியார்கள் அதிகாரர்களிடம் கூறினார்கள் .