Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

என் ஃப்ரெண்டுக்கு இத கொடுத்துருங்க இல்லனா அவ்ளோதான்…. பிரபல ரவுடியை கைது செய்த காவல்துறையினர்…. காஞ்சிபுரத்தில் பரபரப்பு….!!

காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடியின் மீது பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பூங்கோதை என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு படப்பை அருகே 30,00,000 ரூபாய் மதிப்பிலான நிலம் சொந்தமாக உள்ளது. இந்த நிலத்தினை மதுரை மங்கலத்திலிருக்கும் பெரிய ரவுடியான குணா என்பவர் தனது நண்பரின் பெயருக்கு எழுதி வைக்கும் படி மிரட்டியுள்ளார். இதனையடுத்து அவர் அவ்வாறு செய்யாவிடில் கணவரை கொலை செய்து விடுவதாகவும் கூறினார்.

இதனால் அச்சமடைந்த அவர் காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை சூப்பிரண்டான டீ.சண்முகப்பிரியாவிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அப்புகாரை ஏற்ற சூப்பிரண்ட் ரவுடியான குணாவை கைது செய்ய உத்தரவிட்டார். அவ்உத்தரவின்பேரில் மணிமங்கலம் காவல்துறையினர் ரவுடி குணாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |