பாகிஸ்தான் -தென்ஆப்பிரிக்கா அணிகளுகிடையே நடந்த , 2வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி வெற்றி பெற்றது.
ஜோகன்னஸ்பர்கில் நேற்று பாகிஸ்தான் – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே, 2வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே தென்ஆப்பிரிக்கா அணி அதிரடியாக விளையாடியது. அந்த அணியில் டி காக் 80 ரன்கள் ,வான் டர் டுசன் 60 ரன்கள், கேப்டன் பவுமா 92 ரன்கள் மற்றும் மில்லர் 50 ரன்களை எடுத்த, இந்த நான்கு வீரர்களும் பேட்டிங்கில் அரைசதம் அடித்து,அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்பிற்கு 341 ரன்களை எடுத்தது.
இதன்பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 342 ரன்களை இலக்காக கொண்டு விளையாடியது. பாகிஸ்தான் அணியில் விளையாடிய பகர் சமான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் இறுதி வரை தனிமனிதனாக போராடிய பகர் சமான் 193 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோர் உயர்த்தினார். அவர் ஆட்டத்தில் 10 சிக்சர், 18 பவுண்டரி அடித்து விளாசினார். ஆனாலும் இறுதிக்கட்டத்தில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 324 ரன்களை எடுத்து தோல்வியை சந்தித்தது. இதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா அணி ,பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. நடத்த 2 போட்டிகளிலும் பாகிஸ்தான் ,தென்னாப்பிரிக்கா அணிகள் 1-1 என்ற சமநிலையில் வெற்றியை பெற்றுள்ளது.