‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தாக இயக்குனர் வெங்கட் பிரபு டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜேசூர்யா, பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி, உதயா, ஒய் ஜி மகேந்திரன், எஸ் ஏ சந்திரசேகர், டேனியல் பாலாஜி, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
When a 14 day schedule gets wrapped in 7 days! Vera level sir unga team https://t.co/zbsuDqOcVC
— Kalyani Priyadarshan (@kalyanipriyan) April 4, 2021
சென்னை, ஹைதராபாத், பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்நிலையில் மாநாடு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தாக இயக்குனர் வெங்கட்பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை ரீட்வீட் செய்த நடிகை கல்யாணி பிரியதர்ஷன் ’14 நாள் படப்பிடிப்பை 7 நாட்களில் முடித்து விட்டீர்கள். வேற லெவல் சார் உங்க டீம்’ என குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.