Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கடன் அடைத்த பின்னும் வங்கி மேலாளர் குடைச்சல்… மனமுடைந்த விவசாயி விஷம் அருந்தி தற்கொலை..!!

கோவை இந்தியன் வங்கி வாசலிலேயே விவசாயி ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரையில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் பெரும்பான்மையான விவசாயிகள் கடன் தொல்லை காரணமாகவே விவசாயிகள் அதிக அளவில் தற்கொலை செய்து வருகின்றனர். அதன்படி கோவை அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தில் விவசாயி ஆக இருந்தவர் பூபதி. இவரும் இவரது நண்பர்களும் சேர்ந்து பால் பண்ணை வைத்து தொழில் செய்யலாம் என்று திட்டமிட்டிருந்தனர்.

Image result for poison

அதன்படி விவசாயி பூபதி மற்றும் அவரது நண்பர்கள் தனது சொத்துக்களை கோவையில் செயல்பட்டு வந்த இந்தியன் வங்கியில் அடமானம் வைத்து கடன் தொகையை பெற்றனர். இந்நிலையில் பால் பண்ணை தொழில் திடீர் என நஷ்டம் அடைந்தால், வங்கியில் அவர்களால் கடனை செலுத்த முடியவில்லை. பின் தனது பங்கை மட்டும் வங்கியில் செலுத்துவதற்காக பூபதி சென்றிருந்தார்.

Image result for poison death

இதையடுத்து வங்கி மேலாளர் முழு தொகையை செலுத்தினால் மட்டுமே அடமான சொத்துக்களை திருப்பித் தர முடியும் என்று தகராறு செய்ய மனமுடைந்த பூபதி வங்கி வாசலிலேயே விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |