இரு சக்கர வாகனம்- ஜீப் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் பகுதியில் முருகன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் முருகன் தனது இருசக்கர வாகனத்தில் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி சென்றுள்ளார். அப்போது இவரது இருசக்கர வாகனம் தொப்பம்பாளையம் அருகே வந்தபோது, எதிரே வந்த ஜீப் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது.
இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் முருகனை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பவானிசாகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.