நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அதிமுகவினர் முறையாக பண பட்டுவாடா செய்யவில்லை என கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராசிபுரத்தை அடுத்துள்ள பட்டணம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தேர்தலை முன்னிட்டு அதிமுகவினர் அங்குள்ள சிலருக்கு மட்டும் பண பட்டுவாடா செய்வதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதிமுகவினர் முறையாக பண பட்டுவாடா செய்யவில்லை என கோரி சாலையில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி பணப்பட்டுவாடா செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து அங்கு வந்த போலீசாரிடம் பெண்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.