நடிகை கீர்த்தி சுரேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரஜினிமுருகன், ரெமோ, சீமராஜா ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதேபோல் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிகர் சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் நடிகை கல்யாணி பிரியதர்ஷனுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
Happy Happy Birthday Ammu!!!!! Wishing you an amazing birthday with lots of love, fun and luck !!
May you have the craziest year ahead!!!! 😍🤗
Here’s some crazy memories from the past, @kalyanipriyan 😂 #HappyBirthdayKalyaniPriyadarshan #HBDKalyaniPriyadarshan pic.twitter.com/M7sVKr1A2w
— Keerthy Suresh (@KeerthyOfficial) April 5, 2021
அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் சிறுவயது முதலே தனக்கு தோழியாக இருக்கும் கல்யாணி பிரியதர்ஷனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் இருவரும் சிறுவயதில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது . தற்போது நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிகர் சிம்புவுடன் இணைந்து மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.