நடிகை பிரியா ஆனந்த் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் நடிகை பிரியா ஆனந்த் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான வாமனன் படத்தின் மூலம் அறிமுகமானவர் . இதைத்தொடர்ந்து இவர் வணக்கம் சென்னை, எதிர்நீச்சல், எல்கேஜி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது இவர் நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகிவரும் அந்தகன் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படம் பாலிவுட்டில் வெளியாகி வெற்றி பெற்ற அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.
Desh – My Happy Child ❤️ https://t.co/lLZQugqWmS
— Priya Anand (@PriyaAnand) March 20, 2021
இந்நிலையில் நடிகை பிரியா ஆனந்த் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் . அந்த வீடியோவில் பிரியா ஆனந்த் ஒரு பெண் குழந்தையை கட்டிப்பிடித்து விடாமல் முத்தம் கொடுத்து கொஞ்சுகிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.