Categories
உலக செய்திகள்

உலகிற்கு தேவையான பெருமளவு மின்சாரம்.. இதிலிருந்து பெறலாம்.. ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்..!!

சுவிஸர்லாந்தின் ஆய்வாளர்கள், உலகினுடைய அனைத்து மின்சார தேவையின் பெறுமளவை ஏரிகளில் கிடைக்கப்பெறும் மீத்தேன் மூலமாக பெறலாம் என்று கூறியிருக்கிறார்கள்.

மீத்தேன் வாயு, கார்பன்-டை-ஆக்சைடை விட பருவநிலையை சுமார் 25 மடங்கு அதிகமாக பாதிக்க கூடியதாம். இவை பெரும்பாலும் பெட்ரோல் மற்றும் வேளாண் நிறுவனங்கள் மூலமாகத்தான் உருவாகும். எனினும் ஏரிகள் தான் இயற்கையாகவே மீத்தேனை உருவாக்குகின்றன என்று பலருக்கும் தெரியாது. அதாவது ஏரிக்குள் இருக்கும் உயிரினங்களும் தாவரங்களும் இறந்த பின்பு அவை அழுகி மீத்தேன் உருவாகிறது.

பேஸல் மற்றும் சூரிச்சின் ஆய்வாளர்கள் தோராயமாக, ஒட்டுமொத்த உலகின் மின்சாரத் தேவையையும் மீத்தேன் சரியாக்கும் என்று கூட கூறலாம் என்று தெரிவித்துள்ளார்கள். ஆனால் உலகிலேயே தற்போது வரை மத்திய ஆப்பிரிக்காவில் இருக்கும் Kivu ஏரியில் மட்டும் தான் மீத்தேன், ஏரிகளிலிருந்து எடுக்கப்பட்டு மின்சார உற்பத்திக்கு உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

எனினும் ஆய்வாளர்கள், இயற்கை மற்றும் செயற்கை ஏரிகள் சுவிட்சர்லாந்தில் தான் அதிகமாக காணப்படுகிறது என்றும், அதிலிருந்து எடுக்கப்படும் மீத்தேனிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய சுவிட்சர்லாந்து உகந்தது என்று கூறுகிறார்கள். எனினும் இந்த முயற்சியை மேற்கொள்ள சற்று காலங்கள் தேவைப்படும். ஏனெனில் மின்சாரம் தயாரிப்பதற்கு மீத்தேன் உபயோகப்படுத்தலாம்.

என்றாலும் கூட ஏரியிலிருந்து மீத்தேன் பிரித்து எடுக்கப்படுவதால் ஏரியினுடைய சுற்றுச்சூழல், அதிலிருக்கும் தாவரங்களும், உயிரினங்களும் பாதிக்கப்படுமா? என்ற ஆய்வு தேவைப்படுகிறது. மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், மீத்தேனை உருவாக்கும் தாவரங்கள் மற்றும் விலங்குகளால் உருவாக்கப்படும் பயோமாஸ் தாமதமாகவே உருவாகுமாம்.

Categories

Tech |