Categories
உலக செய்திகள்

பாவம் ஓரிடம் பழி ஓரிடமா..? பெண் என்பதால் இப்படி செய்வார்களா..? சூயஸ் கால்வாய் தொடர்பில் வெளியான செய்தி.!!

சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர்கிவன் கப்பலை தவறாக இயக்கியதாக இளம்பெண் மீது பொய்யான வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. 

சூயஸ் கால்வாயின் இடையில் சிக்கி நீண்ட நாட்களாக நின்ற எவர்கிவன் கப்பலை சரியாக இயக்காமல் போக்குவரத்து பாதித்ததற்கு Marwa என்ற 29 வயது இளம்பெண் தான் காரணம் என்று இணையதளங்களில் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த சம்பவத்தின்போது அலெக்சாண்ட்ரியா என்ற பகுதியில் Aida IV என்பவர்தான் கப்பலை செலுத்தியுள்ளார்.

ஆனால் சமூக ஊடகங்களில் எடிட் செய்யப்பட்டு பரவிவரும் புகைப்படங்கள், போலியான இணையதள கணக்குகள், என் பெயரை கெடுத்து விடும் என்ற பயத்தில் உள்ளதாக Marwa  தெரிவித்திருக்கிறார். அதாவது ஆண்கள் மட்டுமே ஏற்கக்கூடிய கப்பல் பயிற்சி அகாடமியில் சட்ட ரீதியாக பல தடைகளை கடந்து வந்தவர் தான் Marwa.

மேலும் தற்போது வரை கேப்டன் பணியில் வெற்றிகரமாக செயலாற்றி வருகிறார். ஆனால் இதுபோன்ற வதந்திகள், பொய்யான செய்திகள் இத்தனை நாட்களாக தான் பட்ட கஷ்டங்களை வீணாகுமோ என்று பயப்படுகிறார். மேலும் எவர்கிவன் கப்பல் பிரச்சனைகளை என்னால் உருவாக்கப்பட்டதாக வெளியான செய்திகளை கண்டவுடன் அதிர்ச்சியடைந்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும் Marwa கூறியுள்ளதாவது, நான் ஒரு பெண் அல்லது எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் தான் என்னை குறிவைத்து சிக்கல்களில் ஈடுபடுத்துகிறார்கள் என்று கருதுவதாக வருத்ததுடன் தெரிவித்துள்ளார். மேலும் பெண் என்பதாலேயே பயிற்சி மேற்கொள்ள தொடங்கியதிலிருந்து பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தேன் என்றும் இன்றளவும் சமூகம் பெண்கள் அவர்களின் வீடுகளை விட்டு தொலைதூரத்தில் நீண்டகாலத்திற்கு கடலில் பணியாற்றுவதை ஏற்றுக்கொள்ள தயங்க தான் செய்கிறது என்றார். மேலும் 2% பெண்கள் மட்டுமே சர்வதேச அளவில் கப்பல் பணியில் இருக்கிறார்கள்.

Categories

Tech |