தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கிய நிறைவடையும் வரை பல சில்மிஷங்கள் நடக்கும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. நேற்று மாலை 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.அவ்வாறு நடந்த தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு பல்வேறு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டனர்.
அதில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு நலத்திட்டங்கள் இடம்பெற்றிருந்தன. அதுமட்டுமன்றி தேர்தல் நடத்துவதற்கான விதிகளை அப்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுக் கொண்டே வருகிறது. அதனால் மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் தேர்தல் நடத்துவதற்கான பணி மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை வாக்குச்சாவடிகளில் சில்மிஷங்கள் நடக்கும். அதனால் அமமுக கட்சியினர் விழிப்போடு இருக்கவேண்டும் என டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாளை வாக்குச்சாவடியில் மிக கவனமாக இருந்து, நமக்கான மக்கள் ஆதரவு சேதாரம் இல்லாமல் நம்மை வந்தடையும் வகையில், விழிப்போடு விதிமுறைகளுக்கு உட்பட்டு கடமை ஆற்றுவோம் என அவர் கூறியுள்ளார்.