நாளைக்கு தமிழக சட்டப்பேரவைக்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் 100%வகுப்பதியை நிறைவேற்ற தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன. இதனிடையே தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் செய்யும் வகையில் ஆர்.ஜே பாலாஜி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில். நாளைக்கு ரொம்ப முக்கியமான நாள் அடுத்த ஐந்து வருடத்திற்கு நம்மள யார் ஆட்சி செய்வாங்க என்று நாம் எடுக்க வேண்டிய நாள் இதற்காகத்தான் லாஸ்ட் 1,2 மாசமா இவ்வளவு அனல்பறக்கும் பிரச்சாரங்களை பார்த்திருப்போம்.
இவங்க அவங்கள திட்டுவது, அவங்க இவங்கள திட்டுவது. அழுவது, அடிச்சிக்கிறது. இந்த வாக்குறுதி, அந்த வாக்குறுதி என்று சொல்லிட்டு என்ன பண்ணப்போறோம், என்ன பண்ணலாம், என்ன பண்ண போறோம் , எல்லாத்தையும் கேட்டுட்டோம் எல்லாரும் சைடுல இருந்தும்…. இதற்கு அப்புறமும் நம்ம முடிவு எடுக்க வேண்டிய நாள். எனக்கு ஒரே ஒரு விஷயம் தோணியது.கடந்த 2, 3 எலக்ச நாளில் ஓட்டு போடுவதை லீவ் நாள் என பார்க்காமல், அதை பொறுப்புள்ள நாட்களாக பார்க்கிற இளைஞ்சர்கள் அதிகமானோர் இருக்கிறாங்க.
ஆனா அதை எப்படி பார்க்கிறார்கள் என்றால் ? வெறும் பட்டனை அமுக்கி விட்டு, கையில் மை வச்சுட்டு…. பேஸ்புக்கில், இன்ஸ்டாகிராமில் போட்டோ போட்டுட்டு என்னுடைய கடமையை பண்ணிட்டேன் என சொல்வது மட்டும் போதுமா என்றால் தெரியல. அனைத்து தேர்தலிலும் அப்பா சொல்ற, அண்ணன் சொல்ற, யாரோ ஒருத்தர் சொல்றதுக்கு ஓட்டு போடுவோம். நாம ஓட்டுப் போடுற கட்சி ஜெயிக்கணும் அப்படிங்கற ஒரு எண்ணம் இருக்கும். ஜாதிக்கு, ஒரு சில இடங்களில் காசுக்கு என்பதை போல ஓட்டு போடுவோம்.
இந்த மாதிரி ஓட்டு போட்டுட்டு, பட்டனை அமுக்கி போட்டோ போடும்போது என்ன பெருமை இருக்கும்னு தெரியல ? இந்த பத்து வருஷத்துல எல்லாமே மாறிடுச்சு. நமக்கு தெரியாத எல்லா விஷயமும் ஆன்லைன்னில் இன்டர்நெட்டில் இருக்கு. ஆனால் அதை தேடி போய் பார்ப்பதற்கான பொறுமையோடு டைமும் நமக்கு இருக்கிறதா என்றால் தெரியல.
நாம் எந்த தொகுதியில் இருக்கோம் ? யாரெல்லாம் அதுல வேட்பாளர்களாக நிக்கிறாங்க ? அவர்களுடைய பின்னணி என்ன ? குற்றப்பின்னணி இருக்கா எவ்ளோ சொத்து வச்சுருக்காங்க ? என்ன எல்லாம் வாக்குறுதி கொடுத்து இருக்காங்க ? அந்த வாக்குறுதியை நிறைவேற்ற அவர்களிடம் திட்டமிடல் இருக்குதா என்கிற எல்லாமே ஒரு பத்து, பதினைந்து நிமிஷம் கூகிளில் தேடினால் நமக்கு தெரிஞ்சிடும். அந்தப் பத்து பதினைந்து நிமிஷத்துக்கு அப்புறம் இவங்களுக்கு தான் ஓட்டு போடணும் என்கிற முடிவை நம்மளே சுயமா எடுக்கும் போது அதில் பயங்கரணம பெருமை இருக்கும் என ஆர்.ஜே பாலாஜி தெரிவித்தார்.