Categories
சினிமா தமிழ் சினிமா

‘ராக்கெட்ரி’ படத்தின் காட்சிகளை பிரதமரிடம் போட்டு காட்டிய மாதவன்… வைரலாகும் டுவீட்…!!!

நடிகர் மாதவன் இயக்கி நடித்துள்ள ‘ராக்கெட்ரி’ படத்தின் காட்சிகளை பிரதமரிடம் போட்டுக் காட்டியுள்ளார்.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ராக்கெட்ரி நம்பி விளைவு . இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றிய நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது .

இந்நிலையில் நடிகர் மாதவன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘கடந்த சில வாரங்களுக்கு முன் பிரதமர் மோடியிடம் இருந்து எனக்கும் விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களுக்கும் அழைப்பு வந்தது. இதையடுத்து இருவரும் பிரதமரை நேரில் சந்தித்தோம்’ என பதிவிட்டுள்ளார் . மேலும் அவர் ராக்கெட்ரி படத்தின் சில காட்சிகளை பிரதமரிடம் போட்டுக் காட்டியதாகவும் அதற்கு அவர் தன்னை பாராட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார். நடிகர் மாதவனின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |