Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் தேர்தல் ரத்து இல்லை – அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வந்தனர். மேலும் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கி வாக்கு சேகரித்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு 7 மணியோடு தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து  தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

திமுக கோரிக்கை வைத்த நிலையில் கொளத்தூர், சேப்பாக்கம், காட்பாடி, திருச்சி மேற்கு, திருவண்ணாமலை தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எந்த தொகுதியிலும் தேர்தல் ரத்து இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |