Categories
உலக செய்திகள்

அழகிய பெண்ணை கண்டதும் காதலிப்பவர்கள்.. வீட்டிற்கு சென்றதும் காணாமல் போவார்களாம்.. ரகசியம் என்ன..?

பிரிட்டனில் அழகான இளம்பெண் ஒருவரை காதலிக்கும் இளைஞர்கள் அவரின் வீட்டிற்கு சென்றதும் காதலே வேண்டாமென்று ஓடும் சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பர்மாவில் வசிக்கும் 20 வயது இளம்பெண் ஜெசிகா. இவரைப் பார்க்கும் அனைவருமே மாடலாக தான் இவர் இருப்பார் என்று எண்ணுவார்களாம். அவ்வளவு அழகாக இருப்பாராம். ஆனால் இவரிடம் காதலை சொல்லும் இளைஞர்கள், இவரின் பொழுதுபோக்கை கேட்டதும் அப்படியே தப்பித்து விடுகிறார்களாம்.

மேலும் சிலர் நாம் நண்பர்களாக இருப்போம் என்று கூறுவார்களாம். அப்படி, இவரின் பொழுதுபோக்குதான் என்ன என்றால், இறந்துபோன விலங்குகளின் உடல்களை நீரில் போட்டு வேக வைத்து, அதன் தோல் மற்றும் தசைகளை நீக்கிவிட்டு மண்டையோடு போன்ற எலும்புகளை மட்டும் சேகரிப்பாராம்.

இதனால் தான் அழகாக இருக்கும் ஜெசிகாவை பார்த்தவுடன் இளைஞர்களுக்கு வரும் காதல், அவரின் வீட்டிற்கு சென்றதும் காணாமல் போகுமாம். ஏன் சில சமயங்களில் அவர்களே  காணாமல் போவார்களாம். எனினும் ஜெசிக்கா தனக்கு இப்படி ஒரு பொழுதுபோக்கு இருப்பதை  மறைக்காமல் தன்னை காதலிப்பதாக கூறும் அனைவரிடமும் கூறியுள்ளார்.

எனினும் அதனை விட மனமில்லாமல், தன் பொழுதுபோக்கை புரிந்துகொண்டு தனக்காக நிச்சயம் ஒரு நாள் ஒருவர் வருவார் என்ற நம்பிக்கையுடன் காத்துக்கொண்டிருக்கிறார்…

Categories

Tech |