நெல்லையில் பறக்கும் படையினர் இதுவரை 14,39,14,744 ரூபாய் மதிப்புடைய பொருட்களையும் மற்றும் பணத்தினையும் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு அனைத்து பகுதிகளிலும் பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க பறக்கும்
படையினரை நியமித்தது. இவர்கள் உரிய ஆவணங்களின்றி பொதுமக்கள் எடுத்து செல்லும் பணத்தினையும், பொருட்களையும் பறிமுதல் செய்து வந்தனர்.
அந்த வகையில் தேர்தல் குழு திருநெல்வேலி மாவட்டத்திலிருக்கும் 5 சட்டமன்றத் தொகுதிக்காக 15 பறக்கும் படை குழுக்களை நியமித்தது. இவர்கள் அனைத்து தொகுதிகளிலும் தீவிரமாக சோதனை செய்ததில் இதுவரை 14,39,14,744 ரூபாய் மதிப்புடைய பொருள்களும், பணமும் சிக்கியுள்ளது.