நெல்லையில் தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் வாக்குச்சாவடிக்கு எளிதாக செல்லும் வகையில் இணையதள வழிகாட்டி செயலியை மாவட்ட கலெக்டர் அறிமுகம் செய்தார்.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவீத வாக்கினை உறுதிப்படுத்தும் வகையில், பொதுமக்கள் எளிதாக தங்களது வாக்குச்சாவடிக்கு செல்வதற்காக இணையத்தள செயலியை மாவட்ட கலெக்டர் விஷ்ணு அறிமுகம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், இச்செயலி மூலம் வாக்காளர்களும், தேர்தல் பணியில் ஈடுபடுவோரும் தங்களது வாக்குச்சாவடிக்கு செல்லும் வழியை அறியலாம். அதாவது பொதுமக்கள் கியூ.ஆர்.கோர்ட் ஸ்கேனின் மூலமாகவோ அல்லது https://tirunelvelielections.in என்ற இணையத்தளத்தின் முகவரி மூலமாகவோ தங்களது வாக்குச்சாவடிக்கு செல்லும் வழியை தெரிந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.