மனித செல்லை விலங்குகளில் செலுத்தி மனிதன் பாதி மிருகம் பாதி என்ற வகையில் புதிய உயிரினத்தை உருவாக்க ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
விண்வெளி ஆய்வு போன்றவற்றிற்கு பயன்படுத்தும் நோக்கில் மனிதன் சிம்பான்சி கலப்பினத்தை உருவாக்கும் முயற்சிகள் சோவியத் இரஷ்யாவில் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.மேலும், சீனாவிலும் கூட இத்தகைய ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இயற்கையோடு விபரீதமாக விளையாடும் முயற்சி என்ற வகையில் மனித விலங்கு கலப்பின கரு ஆய்வு என்பது சர்ச்சைக்குரிய ஆய்வுகளில் ஒன்றாகவே கருதப்படுகிறது.
ஆனால் ஜப்பானை சேர்ந்த முன்னனி ஸ்டெம்செல் ஆய்வாளரான கிறோமிட்சு நகஉச்சி இதற்கான அரசின் ஒப்புதலை பெறுவதற்கு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மனித விலங்கு கலப்பின கருக்களை உருவாக்கி விலங்குகளின் கருப்பையில் வைத்து முதிர்வு காலம் வரை வளர்த்தெடுப்பதற்கு விதித்த தடையை ஜப்பான் கடந்த மார்ச்சில் நீக்கியது . பின்னர், ஐபிஎஸ் வகை மனித ஸ்டெம்செல்களை எலிகளின் கருக்கலில் செலுத்தி முதலில் கணையம் போன்ற உறுப்புகளை உருவாக்க முடியுமா என ஆய்வு செய்யப்படுகிறது.
இந்த ஆய்வுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள ஜப்பான் அறிஞர்கள் பொது மக்களிடம் விளக்கி அவர்களின் அச்சத்தை போக்குவதையும் இது சாத்தியமாகும் என நகவுச்சி ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். மேலும் இந்த ஆய்வுகளுக்கு பல எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. ஒரு குறிப்பிட்ட உறுப்பை வளர்த்தெடுப்பது என்பதைத் தாண்டி மனித செல்லினை விலங்குகளில் பரப்பி , மனிதன் பாதி மிருகம் பாதி என்ற வகையில் கலப்பு உயிர்களை உருவாக்கி விடலாம் என்றும் இதை கடவுளின் படைப்போடு விளையாடும் விளையாட்டு என்றும் எதிர்ப்பாளர்கள் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.