பராமரிப்பு பணி காரணமாக, சென்னையில் நாளை மின்தடை செய்யப்படவுள்ளது .
நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை பராமரிப்புப் பணி காரணமாக சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது .மேலும் சில பகுதிகளான பனையூர், ராஜீவ்காந்தி நகர், என்.ஆர்.ஐ லேஅவுட், பனையூர் குப்பம், பெசன்ட் நகர், ருக்மணி ரோடு, பீச் ரோடு, அருண்டால் பீச் ரோடு, எம்.ஜி.ஆர் ரோடு போன்ற பகுதிகளில் மின்தடை செய்யப்படவுள்ளது .
மேலும் காந்தி நகர் கேன்சர் மருத்துவமனைவேளச்சேரி, டான்சி நகர், அண்ணா நகர், அண்ணா நகர் விரிவு, அண்னை இந்திரா நகர், செல்வா நகர் மற்றும் விரிவு, பாலமுருகன் நகர், வீணஸ் காலனி ஆகிய இடங்களில் மின்விநியோகம் தடை செய்யப்பட உள்ளது. பராமரிப்பு பணி மாலை 4.00 மணிக்குள்முடிவடைந்தவுடன் மின் விநியோகம் சீராகும் என கூறப்படுகிறது .