திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தேர்தல் பார்வையாளர் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணியை ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனால் வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்குப்பதிவு எந்திரங்களையும் பாதுகாக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று துப்பாக்கி ஏந்திய காவல்துறையினரின் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.
மாவட்ட தேர்தல் மேற்பார்வையாளர் சோமாபட்டாசார்ஜி இந்தப் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்பையா, சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபாகரர், அரசு அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.