தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. மக்களும் வாக்குகளை பதிவு செய்வதற்காக தயாராக இருக்கின்றனர். இந்நிலையில் தேர்தலன்று வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்க 80 வயதுள்ள முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச கார் சேவையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும் கொரோனா நோயாளிகள் வாக்குச்சாவடிக்கு செல்ல ஆம்புலன்ஸ் அழைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமின்றி வந்து வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.