Categories
மாநில செய்திகள்

இன்னும் சற்று நேரத்தில் வாக்குப்பதிவு தொடக்கம்… ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள்…!!!

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் இன்னும் சற்று நேரத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது.

தமிழகம் முழுவதும் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தேர்தல் பணிகள் அனைத்தும் மும்முரமாக நடந்து வந்தன. அதன்படி அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்கள். மேலும் தேர்தல் நடத்துவதற்கான விதிகளை அவ்வப்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுக் கொண்டே வருகிறது. அதனால் தேர்தல் பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள்.

Categories

Tech |