Categories
பல்சுவை மாநில செய்திகள்

சென்னை ஸ்டெல்லா மேரிஸ் வாக்குச்சாவடியில்…. நடிகர் ரஜினி வாக்களித்தார்…!!!

தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்களும் வாக்குகளை பதிவு செய்வதற்காக தயாராக நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மேலும் அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்களும் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தலன்று வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்க 80 வயதுள்ள முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச கார் சேவையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமின்றி வந்து வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் வாக்குச்சாவடியில் வந்து மக்களோடு மக்களாக வந்து நின்று தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

Categories

Tech |