ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் திருச்சி விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூர் செல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் நரேஷ் குமார் ரெட்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திருச்சியில் இருந்து கோலாலம்பூர் செல்ல இருந்தார். இந்நிலையில் குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தபோது நரேஷ் குமார் ரெட்டி மீது ஆந்திர மாநிலம் பஞ்சாரம் காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் அவரை ஏர்போர்ட் காவல்துறையினரிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்துள்ளனர். இதனை அறிந்த நரேஷ் குமார் ரெட்டி விமான நிலையத்தில் இருந்து தப்பி செல்ல முயற்சித்தபோது குடியுரிமை பிரிவு அதிகாரி அவரை மடக்கிப்பிடித்து ஏர்போர்ட் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அதன்பின் ஏர்போர்ட் காவல்துறையினர் நரேஷ் குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்து விட்டனர்.