தமிழகத்தில் இன்று காலை 234 தொகுதிகளிலும் 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்களும் வாக்குகளை பதிவு செய்வதற்காக தயாராக நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மேலும் அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்களும் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தலன்று வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்க 80 வயதுள்ள முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச கார் சேவையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமின்றி வந்து வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடவூர் ஒன்றியம் வாக்குச்சாவடி எண் 251 சுயேச்சை வேட்பாளர் சின்னத்தில் பட்டன் இல்லாததால் வாக்குபதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக வேறு வாக்கு இயந்திரம் வரவழைக்கப்பட்டு உள்ளதால் மக்கள் காத்திருக்கின்றனர்.