விளையாடுவதற்கு செல்போன் தராததால் கோபத்தில் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள குப்பத்து பாளையம் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இஷாந்த் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இஷாந்த் எப்போதும் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்ததால் கோவிந்தராஜ் செல்போனில் விளையாட கூடாது என கண்டித்துள்ளார். இதனை அடுத்து மீண்டும் இஷாந்த் கோவிந்தராஜனிடம் விளையாட செல்போன் கேட்டபோது சிறிது நேரம் கழித்து தருவதாக கோவிந்தராஜ் கூறியுள்ளார்.
இதனால் கோபத்தில் தனது அறைக்குள் சென்ற இஷாந்த் திடீரென மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் இதுகுறித்து தகவலறிந்த திருவள்ளூர் தாலுகா காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.