Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இப்படியா கழிவை கொண்டு போறது…? கொஞ்சம் கூட பராமரிக்கல… வாகன ஓட்டிகளின் அச்சம்…!!

டிராக்டரில் ஏறிச் செல்லும் மண் மற்றும் கட்டிட கழிவுகளை பாதுகாப்பான முறையில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி வட்டாரத்தில் கட்டிடம் கட்டும் பணியானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் கட்டிடங்களில் இருந்து மீதமாகும் மண் மற்றும் கட்டிட கழிவுகளை டிராக்டர்களில் ஏற்றி செல்கின்றனர். ஆனால் இந்த டிராக்டர் சரியான முறையில் பராமரிக்கபடாமலும், போக்குவரத்து துறை அதிகாரிகளால் புதுப்பிக்காமலும் உள்ளது. மேலும் இவ்வாறு கொண்டுசெல்லும் கழிவுகளை தார்ப்பாய் கொண்டு மூடாமல் கொண்டு செல்கின்றன.

இதனால் இந்த வாகனங்களில் பக்கவாட்டு விரிசல்கள் வழியாக ரோட்டில் மண்  விழுவதால் அது இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களின் கண்ணில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உண்டாகியுள்ளது. எனவே மண் மற்றும் கட்டட கழிவுகளை வாகனங்களில் பாதுகாப்பான முறையில் ஏற்றி செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |