Categories
மாநில செய்திகள்

விஜய் சைக்கிளில் சென்ற காரணம் தெரியுமா?… இதோ குஷ்பு சொல்லுறாங்க கேளுங்க…!!!

விஜய் சைக்கிளில் சென்றதற்கான காரணம் என்னவென்று பாஜக வேட்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வாக்களிக்க முடியாது.

இந்நிலையில் நடிகர் விஜய் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், தனது வாக்கினை செலுத்த சைக்கிளில் பேரணியாக சென்றார். சென்னையில் உள்ள நீலாங்கரையில் தனது வாக்கினை செலுத்தினார். நிறைய இடங்களில் விஜய் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கோஷம் எழுப்பி ஆரவாரம் செய்து வந்தனர். பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் விஜய் சைக்கிளில் வந்தார். இதனையடுத்து நேரத்தை வீணாக்கக் கூடாது என்பதற்காகவே நடிகர் விஜய் சைக்கிளில் வாக்களிக்க சென்றதாக பாஜக வேட்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார். விஜய் சைக்கிளில் சென்றதற்கு வேறு எந்த கற்பனையையும் உருவாக்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |