Categories
சினிமா தமிழ் சினிமா

ஜீ தமிழ் சீரியலில் இணைந்த விஜய் டிவி பிரபலம்…. யார் தெரியுமா…?

விஜய் டிவி பிரபலம் ஜீ தமிழில் சீரியலில் நடித்து வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தொலைக்காட்சி சேனலான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல்களுக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக இந்த சீரியலில் இடம் பெற்றுள்ள பார்வதி மற்றும் ஆதி கதாபாத்திரம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் செம்பருத்தி சீரியல் நடிகர் நடிகைகள் அவ்வப்போது தங்களது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவர். அந்த வகையில் அக்னி,ஷபானா மற்றும் அது இது எது பிரபலம் திவாகர் ஆகியோர் சேர்த்து எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்க்கும்போது செம்பருத்தி சீரியலில் திவாகர் இணைந்து நடித்திருக்கிறார் என்று தெரியவந்துள்ளது.

Categories

Tech |