வாக்காளர்களுக்கு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆதரவாளர்கள் டோக்கன் தருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வாக்களிக்க முடியாது.
அதன்படி தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். இந்நிலையில் வாக்காளர்களுக்கு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆதரவாளர்கள் தொகை தருவதாக காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்துள்ளனர். டோக்கன் வழங்கிக்கொண்டிருந்த பாஜகவினரை காங்கிரஸ் கட்சியினர் சுற்றி வளைத்துப் பிடித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் பாஜகவுக்கு துணைபோவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.