ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானா கடற்கரையில் 60 க்கும் அதிகமான டால்பின்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கானா கடற்கரையில் சமீப நாட்களில் 60 ற்கும் அதிகமான டால்பின்கள் உயிரிழந்துள்ளது. இக்கடற்கரையில் உயிரிழந்த டால்பின்கள் கரை ஒதுங்கி இருப்பதாக நாட்டினுடைய சுற்றுச்சூழலின் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் உயிரினங்களின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. கானா மீன்வள ஆணையத்தினுடைய நிர்வாக இயக்குனரான மைக்கேல் ஆர்தர் டாட்ஸி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கடலினுடைய நிறமும் வெப்பமும் சாதாரணமான நிலையில் தான் இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் டால்பின்கள் உயிரிழக்க என்ன காரணம்? என்பதை கண்டுபிடிக்க அதன் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
ஆனால் இதனை காரணமாக கொண்டு டால்பின்கள் மற்றும் தற்போது பிடிக்கப்பட்டுள்ள பிற மீன்களையும் உணவாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதேபோன்று கடந்த பிப்ரவரி மாதத்திலும் 111 டால்பின்கள் உயிரிழந்த நிலையில் மொசாம்பிக் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது.